விண் வாசஸ்தலமாம் / Vin Vaasasthalamaam / Vin Vaasasthalamam

விண் வாசஸ்தலமாம் / Vin Vaasasthalamaam / Vin Vaasasthalamam

1         
விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே
விஸ்வாசம் காட்சி ஆம்
நம்பிக்கை சித்திக்கும்
மா ஜோதியால் எல்லாம்
என்றும் பிரகாசிக்கும்

2        
தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்

3        
தெய்வாட்டுக் குட்டியின்
கை கால் விலாவிலே
ஐங்காயம் நோக்கிடின்
ஒப்பற்ற இன்பமே!
சீர் வெற்றி ஈந்ததால்
அன்போடு சேவிப்போம்
பேரருள் பெற்றதால்
என்றைக்கும் போற்றுவோம்

4        
துன்புற்ற பக்தரே
விண் வீட்டை நாடுங்கள்
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள்
இத் துன்பம் மாறுமே
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!