வெள்ளை அங்கி தரித்து / Vellai Angi Thariththu / Vellai Angi Tharithu

வெள்ளை அங்கி தரித்து / Vellai Angi Thariththu / Vellai Angi Tharithu

1   
வெள்ளை அங்கி தரித்து
சுடர் ஒளியுள்ளோர் ஆர்
ஸ்வாமியை ஆராதித்து
பூரிப்போர் களிப்போர் ஆர்
சிலுவையை எடுத்து
இயேசுவின் நிமித்தமே
யுத்தம் பண்ணிப் பொறுத்து
நின்றோர் இவர்கள்தானே

2   
மா துன்பத்திலிருந்து
வந்து விசுவாசத்தால்
தெய்வ நீதி அணிந்து
சுத்தமானார்; ஆதலால்
ஓய்வில்லாமல் கர்த்தரை
கிட்டி நின்று சேவிப்பார்
கர்த்தர் சுத்தவான்களை
சேர்த்து ஆசீர்வதிப்பார்

3   
அவர் ஜெயம் கொண்டோராய்
இனி சோதிக்கப்படார்
தீமை நீங்கித் தூயோராய்
பசி தாகம் அறியார்
மத்தியான உஷ்டணம்
இனி படமாட்டாதே;
அவர்கள் மெய்ப் பாக்கியம்
வளர்ந்தோங்கும் நித்தமே

4   
தெய்வ ஆட்டுக்குட்டியும்
அவர்களைப் போஷிப்பார்
ஜீவ தருக் கனியும்
ஜீவ நீரும் அளிப்பார்
துக்கம் துன்பம் ஒழித்து
குறை யாவும் நீக்குவார்
கண்ணீரையும் துடைத்து
அன்பினால் நிரப்புவார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!