வயல் உழுது தூவி / Vayal Oludhu Thoovi / Vayal Ozhudhu Thoovi
1
வயல் உழுது தூவி
நல் விதை விதைப்போம்
கர்த்தாவின் கரம் அதை
விளையச் செய்யுமாம்
அந்தந்தக் காலம் ஈவார்
நற்பனி மழையும்
சீதோஷ்ணம் வெயில் காற்று
அறுப்புவரையும்
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே
2
விண் வானம் ஆழி பூமி
அவரே சிருஷ்டித்தார்
புஷ்பாதி விண் நட்சத்திரம்
பாங்காய் அமைக்கிறார்
அடக்கி ஆழி காற்று
உண்பிப்பார் பட்சிகள்
போஷிப்பிப்பார் அன்றன்றும்
மைந்தாராம் மாந்தர்கள்
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே
3
நல் ஈவு பலன் பாக்கியம்
விதைப்பு அறுப்பை
ஜீவன் சுகம் ஆகாரம்
தரும் பிதா உம்மை
துதிப்போம், அன்பாய் ஏற்பீர்
படைக்கும் காணிக்கை
யாவிலும் மேலாய்க் கேட்கும்
தாழ்மையாம் உள்ளத்தை
நல் ஈவுகள் யாவும்
ஈபவர் கர்த்தரே
துதிப்போம் என்றும் துதிப்போம்
அவர் மா அன்பையே