வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே | Varuthappattu Baaram Sumakkum Nanbane / Varuththappattu Baaram Sumakkum Nanbane / Varuthappattu Baaram Sumakkum Nanbanae / Varuththappattu Baaram Sumakkum Nanbanae / Varuthappattu Baram Sumakkum Nanbane / Varuththappattu Baram Sumakkum Nanbane / Varuthappattu Baram Sumakkum Nanbanae / Varuththappattu Baram Sumakkum Nanbanae
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
1
பாவத்தின் பிடியில் சிக்கி உழன்று போனாயோ
விடுவிப்பார் யாருமின்றி கலங்கிப் போனாயோ
பாவத்தை வென்ற இயேசு உன்னை அழைக்கிறார்
பாவ சேற்றிலிருந்து உன்னை தூக்கி விடுகிறார்
வந்திடுவாய் இயேசுவிடம் பரிசுத்தமாய் மாற்றிவார்
வந்திடுவாய் இயேசுவிடம் பரிசுத்தமாய் மாற்றிவார்
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
2
தீராத நோயினால் நீ துவண்டு போனாயோ
வேதனையின் கொடுமையினால் பதறுகின்றாயோ
குணமாக்கும் கர்த்தர் உன்னை கருத்தாய் அழைக்கிறார்
வேதனைகள் நீக்கிடுவார் நோய்கள் குணமாக்கிடுவார்
உன் நோய்களுக்காக தானே சிலுவையிலே பலியானார்
உன் நோய்களுக்காக தானே சிலுவையிலே பலியானார்
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
3
எதிர்காலம் என்னவென்று ஏங்குகிறாயோ
எல்லாமே தோல்வியென்று சோர்ந்து போனாயோ
காலத்தை படைத்த தேவன் உன்னை அழைக்கிறார்
கரம்தனை பிடித்து உன்னை வழிநடத்துவார்
கலங்காதே திகையாதே கர்த்தர் உன்னைக் காத்திடுவார்
கலங்காதே திகையாதே கர்த்தர் உன்னைக் காத்திடுவார்
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
4
நண்பர் உன்னை கைவிட்டதால் நீ துவண்டு போனாயோ
நம்பிக்கை துரோகத்தால் நீ சோர்ந்து போனாயோ
உண்மை நண்பர் இயேசுவைப் பார் உனக்காக உயிரைத் தந்தார்
உலகமே வெறுத்தாலும் உன்னை அவர் நேசிக்கிறார்
ஒரு போதும் கைவிடாரே ஒருநாளும் விலகிடாரே
ஒரு போதும் கைவிடாரே ஒருநாளும் விலகிடாரே
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே
வருந்தி அழைக்கும் இயேசுவிடம் வந்திடு
வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் நண்பனே | Varuthappattu Baaram Sumakkum Nanbane / Varuththappattu Baaram Sumakkum Nanbane / Varuthappattu Baaram Sumakkum Nanbanae / Varuththappattu Baaram Sumakkum Nanbanae / Varuthappattu Baram Sumakkum Nanbane / Varuththappattu Baram Sumakkum Nanbane / Varuthappattu Baram Sumakkum Nanbanae / Varuththappattu Baram Sumakkum Nanbanae | Trichy Ilayaraja | Vijay | J. Jeba Joselin