வானமும் பூமியும் / Vaanamum Bhoomiyum / Vaanamum Boomiyum

வானமும் பூமியும் / Vaanamum Bhoomiyum / Vaanamum Boomiyum

1   
வானமும் பூமியும்
சமஸ்த அண்டமும்
படைத்த நீர்
வேதத்தின் ஒளியை
பரப்பி இருளை
அகற்றி செங்கோலை
செலுத்துவீர்

2   
மீட்பை உண்டாக்கவும்
மாந்தரைக் காக்கவும்
பிறந்த நீர்
பாவத்தை அழித்து
சாத்தானை மிதித்து
மாந்தரை ரட்சித்து
நடத்துவீர்

3   
பாவியின் நெஞ்சத்தை
திருப்பி ஜீவனை
கொடுக்கும் நீர்
சபையை முழுதும்
திருத்தித் தேற்றவும்
ஏகமாய்ச் சேர்க்கவும்
அருளுவீர்

4   
ஞானம் நிறைந்தவர்
அன்பு மிகுந்தவர்
திரியேகரே
ராஜ்ஜியம் வல்லமை
நித்திய மகிமை
உமக்கே உரிமை
ஆண்டவரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!