உயிர்த்தெழும் காலைதன்னில் / Uyirththelum Kaalaidhannil / Uyirththelum Kaalaidhannil / Uyirthelum Kaalaidhannil / Uyirthelum Kaalaidhannil

உயிர்த்தெழும் காலைதன்னில் / Uyirththelum Kaalaidhannil / Uyirththelum Kaalaidhannil / Uyirthelum Kaalaidhannil / Uyirthelum Kaalaidhannil

1      
உயிர்த்தெழும் காலைதன்னில்
ஆவி தேகம் கூடவும்
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்

2        
ஆவி தேகம் சிறு போது
நீங்க தேகம் ஓய்வுறும்
தூய அமைதியில் தங்கி
துயிலும்

3        
பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்

4        
ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்

5        
சேர்ந்த ஆவி தேகமதை
அப்பால் பிரியாதொன்றும்
கிறிஸ்து சாயல் தன்னில் கண்டு
பூரிக்கும்

6        
உயிர்த்தெழும் நாளின் மாட்சி
யாரால் சொல்லிமுடியும்
நித்திய காலம் மா சந்தோஷம்
நிலைக்கும்

7        
ஆ அப்பாக்கிய மாட்சி நாளில்
மாண்டோர் உயிர்த்தெழுவார்
பெற்றோர் பிள்ளை சுற்றத்தாரும்
கூடுவார்

8        
நின் சிலுவை பற்றும் எம்மை
சாவில் நியாயத்தீர்ப்பிலும்
காத்து மா அக்கூட்டம் சேரும்
இயேசுவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!