உன்னதரே நீர் மகிமை / Unnadhare Neer Magimai / Unnathare Neer Magimai
1
உன்னதரே நீர் மகிமை
இந்நிலம் சமாதானத்தை
அடைய அன்பு ஒங்க
பராபரனார் கர்த்தாவே
பரம ராஜர் பர்த்தாவே
வல்லமை தந்தாய் வாழ்க
தாழ்ந்து வீழ்ந்து
போற்றுவோமே புகழ்வோமே
தொழுவோமே
மாட்சிமைக்கென்றும் ஸ்தோத்ரம்
2
பிதாவின் ஒரே மைந்தனே
சுதாவே கர்த்தர் ராஜரே
தெய்வாட்டுக்குட்டி நீரே
பார் மாந்தர் பாவம் போக்கிடும்
மா தந்தை பக்கல் ஆண்டிடும்
மகத்துவ கிறிஸ்து நீரே
கேட்பீர் ஏற்பீர்
ஏழை நீசர் எங்கள் ஜெபம் தாழ்
வாம் வேண்டல்
இரங்குவீர் தயவோடே
3
நீர் தூயர் தூயர் தூயரே
நீர் கர்த்தர் கர்த்தர் கர்த்தரே
என்றென்றும் ஆள்வீர் நீரே
பிதாவின் ஆசனத்திலே
மேதையாய் வீற்றுப் பாங்கினில்
கர்த்தாவாம் ஆவியோடே
இன்றும் என்றும்
ஏக மாண்பு ஏக மாட்சி ஏக
மேன்மை
தாங்கி ஆள்வீர் தேவரீரே
ஆமேன்
