உந்தன் அன்பின் ஆழிக்கு | Undhan Anbin Aazhikku / Undhan Anbin Aalikku
1
உந்தன் அன்பின் ஆழிக்குக் கரையே இல்லை
உந்தன் நேச வாழ்வுக்கு முடிவே இல்லை
உந்தன் அன்பின் ஆழிக்குக் கரையே இல்லை
உந்தன் நேச வாழ்வுக்கு முடிவே இல்லை அன்பின்
நீளம் அகலமும் உயரம் ஆழமெல்லாம்
நித்தியம்தான் வர்ணிக்கும் நித்ய காலமாய் அன்பின்
நீளம் அகலமும் உயரம் ஆழமெல்லாம்
நித்தியம்தான் வர்ணிக்கும் நித்ய காலமாய்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
2
பாவ துரோகம் எண்ணாது பதில் செய்யாது
குரூர வாதை ஏற்று நேசித்ததேனோ
பாவ துரோகம் எண்ணாது பதில் செய்யாது
குரூர வாதை ஏற்று நேசித்ததேனோ விண்ணில்
பொற்காயம் ஒவ்வொன்றாய் முத்தி செய்துமே யான்
பொன்னேசுவின் நேசத்தில் கண்ணீர் சொரிவேன் விண்ணில்
பொற்காயம் ஒவ்வொன்றாய் முத்தி செய்துமே யான்
பொன்னேசுவின் நேசத்தில் கண்ணீர் சொரிவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
3
மேற்கு கிழக்கு தூரமாய் தோஷமெல்லாம்
மாற்றி மறந்தீர் மன்னித்தெறிந்ததையும்
மேற்கு கிழக்கு தூரமாய் தோஷமெல்லாம்
மாற்றி மறந்தீர் மன்னித்தெறிந்ததையும் மேலே
மன்னவா உம்மையல்லால் வேறே ஆசை இல்லை
மகத்துவ கானம் பாடி அணைத்திடுவேன் மேலே
மன்னவா உம்மையல்லால் வேறே ஆசை இல்லை
மகத்துவ கானம் பாடி அணைத்திடுவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
4
வானம் பூமிமேல் உயர்ந்தது போலவே
விண் ஆவியால் தூய வாழ்வீந்தீரே
வானம் பூமிமேல் உயர்ந்தது போலவே
விண் ஆவியால் தூய வாழ்வீந்தீரே வானில்
வனப்புமிக ஜொலிக்கும் உயர் கோபுரங்களை
வானவரோடு சுற்றி அகமகிழ்வேன் வானில்
வனப்புமிக ஜொலிக்கும் உயர் கோபுரங்களை
வானவரோடு சுற்றி அகமகிழ்வேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
இயேசுவே என்னையும் நேசித்தீர்
உம் அன்பிற்கீடாய் என்ன செய்குவேன்
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
நேசா என் நேசமெல்லாம் நேசர் உமக்கே சொந்தம்
நானும் உமக்கே சொந்தமே
5
சேவை செய்யும் தாசரும்மோடிருப்பர்
சேவையில் சுத்தரோடென்னைக் காப்பீரே
சேவை செய்யும் தாசரும்மோடிருப்பர்
சேவையில் சுத்தரோடென்னைக் காப்பீரே நேசர்
இயேசுவின் அன்பில் மூழ்கி ஆழத்தை அறிய
சீயோனில் சேவிப்பேன் யுகாயுகங்களாய் நேசர்
இயேசுவின் அன்பில் மூழ்கி ஆழத்தை அறிய
சீயோனில் சேவிப்பேன் யுகாயுகங்களாய்