உம்மாலேதான் என் இயேசுவே / Ummalethaan En Yesuve / Ummalethan En Yesuve

உம்மாலேதான் என் இயேசுவே / Ummalethaan En Yesuve / Ummalethan En Yesuve

1    
உம்மாலேதான் என் இயேசுவே
ரட்சிக்கப்படுவேன்
உம்மாலேதான் பேரின்பத்தை
அடைந்து களிப்பேன்

2    
இப்பந்தியில் நீர் ஈவது
பரம அமிர்தம்
இனி நான் பெற்றுக்கொள்வது
அநந்த பாக்கியம்

3    
இவ்வேழை அடியேனுக்கு
சந்தோஷத்தைத் தந்தீர்
இக்கட்டு வரும்பொழுது
நீர் என்னைத் தேற்றுவீர்

4    
பூமியில் தங்கும் அளவும்
உம்மையே பற்றுவேன்
எவ்வேளையும் எவ்விடமும்
நான் உம்மைப் போற்றுவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!