உம் அருள் பெற இயேசுவே / Um Arul Pera Yesuve

உம் அருள் பெற இயேசுவே / Um Arul Pera Yesuve

1   
உம் அருள் பெற இயேசுவே
நான் பாத்திரன் அல்லேன்
என்றாலும் தாசன் பேரிலே
கடாக்ஷம் வையுமேன்

2   
நீர் எனக்குள் பிரவேசிக்க
நான் தக்கோன் அல்லவே
நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க
நிமித்தம் இல்லையே

3   
ஆனாலும் வாரும் தயவாய்
மா நேச ரக்ஷகா
என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய்
என் பாவ நாசகா

4   
நற்கருணையாம் பந்திக்கும்
அபாத்திரன் ஆயினேன்
நற் சீரைத் தந்து என்னையும்
கண்ணோக்கிப் பாருமேன்

5   
தெய்வீக பான போஜனம்
அன்பாக ஈகிறீர்
மெய்யான திவ்விய அமிர்தம்
உட்கொள்ளச் செய்கிறீர்

6   
என் பக்தி ஜீவன் இதினால்
நீர் விர்த்தியாக்குமேன்
உந்தன் சரீரம் இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்

7   
என் ஆவி தேகம் செல்வமும்
நான் தத்தம் செய்கிறேன்
ஆ இயேசுவே சமஸ்தமும்
பிரதிஷ்டை செய்கிறேன்

உம் அருள் பெற இயேசுவே / Um Arul Pera Yesuve | Disciples Choir, Perumalpuram, Palayamkottai, Tirunelveli, Tamil Nadu, India

உம் அருள் பெற இயேசுவே / Um Arul Pera Yesuve | Jollee Abraham | Ernest Chellappa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!