தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே / Thothiram Thothirame Yesu Swamiku Thothirame / Sthothiram Sthothiram Yesu Swamiku Sthothiram

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

1
கோடா கோடி தூதர்கள் சபை கூடி நடனமாடி
பாடி உமைத் துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

2
கேருபீன் சேராபீன்கள் உடல் செட்டைகளால் மூடி
நேராய் உமைத் துதிக்க நீசன் யானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

3  கன்னியர் கீதம்பாடி இயேசு கர்த்தனையே போற்றி
உன்னித் துதித்திடவே பாவியானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

4
பரிசுத்தவான்கள் சங்கம் எங்கள் பார்த்திபன் இயேசுவையே
தரிசித்துப் போற்றிடவே தாசன் யானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

5
மூப்பர் சுற்றி நின்று எங்கள் முன்னவன் இயேசுவையே
ஆர்ப்பரித்துத் துதிக்க அடியானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

6
வானத்தின் ஜோதி எலலாம் தேவமைந்தனையே போற்றி
ஞாலத்திலே துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

7
பூமியின் தாவரங்கள் புஷ்பம் பூத்துத் துளிர் மலர்ந்து
சாமி உமைத் துதிக்கத் தாசன் யானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

8
தாழ்த்தித் தலை குனிந்து ரத்தச்சாட்சிகள் கூட்டமெல்லாம்
வாழ்த்தி உமைத் துதிக்கப் பாவியானும் உமைத் துதிப்பேன்

தோத்திரம் தோத்திரமே இயேசு சுவாமிக்குத் தோத்திரமே
தோஷி எனை இரட்சித்த பரிசுத்தர்க்குத் தோத்திரமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!