தந்தாய் உம்மைத் துதித்தே / Thandhaai Ummai Thudhithe / Thandhai Ummai Thudhithe / Thanthaai Ummai Thuthithe / Thanthai Ummai Thuthithe

தந்தாய் உம்மைத் துதித்தே / Thandhaai Ummai Thudhithe / Thandhai Ummai Thudhithe / Thanthaai Ummai Thuthithe / Thanthai Ummai Thuthithe

1
தந்தாய் உம்மைத் துதித்தே 
உந்தன் நாமம் போற்றுவோமே 
அற்பர் பாவம் யாவுமே 
தற்பரா நீர் மன்னிப்பீரே
தூதரோடும் வேந்தே உம் 
பாதம் வீழ்ந்தே சேவிப்போம்

2
வான சேனையாருமே 
மோன தூய பக்தரோடும்
கேரூப் சேராப் கோஷ்டிகள் 
சேரும் உந்தன் நாமம் போற்ற
தூய தூயரே உம்முன் 
தாழ்ந்து வீழ்ந்து பாடுவார்

3
தூய வானோர் போற்றிடும் 
தூய தூய தூய கர்த்தா
மாந்தர் யாரும் பாடிடும் 
வேந்தர் மீட்பர் உம்  தயாளம் 
அன்பு யார்க்கும் ஈவதால் 
நன்றியோடு ஏற்றுவோம்

4
உந்தன் சமாதானமே 
எந்தத் தேசம் தன்னில் ஊன்ற 
யுத்தம் பகை ஓய்ந்திட
அத்தன் அன்பால் மாந்தர் கூட
வீழ்வார் உந்தன் பாதமே 
தாழ்வார் உந்தன் நாமத்தில்

5
தந்தை சுதன் ஆவிக்கே 
எந்த நாளும் மேன்மை ஸ்துதி
ஆதரிக்கும் மூர்த்தியே,
பாதம் வீழ்ந்து சர் நாங்கள்
அன்பா உந்தன் மா அன்பை 
என்றும் என்றும் ரூபிப்போம்

ஆமேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!