தாயும் நீரே / Thaayum Neere / Thayum Neere
தாயும் நீரே தந்தை நீரே தாங்கிடும் தோழன் நீரே
வாழ்வும் நீரே வாசல் நீரே வானத்தின் மன்னா நீரே
தாயும் நீரே தந்தை நீரே தாங்கிடும் தோழன் நீரே
வாழ்வும் நீரே வாசல் நீரே வானத்தின் மன்னா நீரே
தாழ்வில் தேடி வந்து வாழ்வை தந்தவரே
தாழ்வில் தேடி வந்து வாழ்வை தந்தவரே
தாயும் நீரே தந்தை நீரே தாங்கிடும் தோழன் நீரே
வாழ்வும் நீரே வாசல் நீரே வானத்தின் மன்னா நீரே
1
என்னென்ன துன்பங்கள் என் வாழ்விலே
வந்தாலும் நீர் என்னை கண்போலவே
என்றென்றும் காக்கின்ற என் தேவனே
நன்றி இயேசுவே
கண்ணீரை நான் சிந்தும் நேரங்களில்
என் மீது பாசத்தை நீர் காட்டியே
என்னை நீர் தேற்றினாரே
என்னென்ன துன்பங்கள் என் வாழ்விலே
வந்தாலும் நீர் என்னை கண்போலவே
என்றென்றும் காக்கின்ற என் தேவனே
நன்றி இயேசுவே
கண்ணீரை நான் சிந்தும் நேரங்களில்
என் மீது பாசத்தை நீர் காட்டியே
என்னை நீர் தேற்றினாரே
வாழ்வின் பயணங்களில் வாடும் நேரங்களில்
வழியில் நான் சோர்ந்து விட தாங்கி என்னை தேற்றினீர்
தூக்கி எடுத்தீர் தோளில் சுமந்தீர்
நெஞ்சின் துயர் நீக்கினீர்
தூக்கி எடுத்தீர் தோளில் சுமந்தீர்
நெஞ்சின் துயர் நீக்கினீர்
தாயும் நீரே தந்தை நீரே தாங்கிடும் தோழன் நீரே
வாழ்வும் நீரே வாசல் நீரே வானத்தின் மன்னா நீரே
2
பொல்லாத மாந்தர்க்கு மீட்பைத் தர
நல்லாயனாய் வந்த என் மீட்பரே
செல்கின்ற பாதைக்கு நல்தீபமாய்
வேதம் தந்தீரே
கல்வாரி ரத்தத்தினாலே எந்தன்
கல்லான நீங்த்தை நெஞ்சத்தை நீர் மாற்றினீர்
செல்ல மகனாக்கினீர்
பொல்லாத மாந்தர்க்கு மீட்பைத் தர
நல்லாயனாய் வந்த என் மீட்பரே
செல்கின்ற பாதைக்கு நல்தீபமாய்
வேதம் தந்தீரே
கல்வாரி ரத்தத்தினாலே எந்தன்
கல்லான நீங்த்தை நெஞ்சத்தை நீர் மாற்றினீர்
செல்ல மகனாக்கினீர்
அன்பின் சிலுவைத்தனை அன்று நான் கண்டதால்
இன்று என் வாழ்வில் மாற்றம் என்ன சொல்வேன் ஐயா
உம்மை பணிவேன் என்னை தருவேன் என்றும் துதிப்பேன் ஐயா
உம்மை பணிவேன் என்னை தருவேன் என்றும் துதிப்பேன் ஐயா
தாயும் நீரே தந்தை நீரே தாங்கிடும் தோழன் நீரே
வாழ்வும் நீரே வாசல் நீரே வானத்தின் மன்னா நீரே