yesuvae

இயேசுவே நீர் என்னை விட்டால் / Yesuve Neer Ennai Vittaal / Yesuve Neer Ennai Vittal / Yesuvae Neer Ennai Vittaal / Yesuvae Neer Ennai Vittal

1   
இயேசுவே நீர் என்னை விட்டால்
கெட்டழிந்து போவேனே
பாவ சோதனைக்குட்பட்டால்
மோசத்திற்குள்ளாவேனே
இயேசுவே நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்

2   
நேசரால் கைவிடப்பட்டு
நொந்து போய்த் தவிக்கையில்
ஆபத்தால் நெருக்கப்பட்டு
ஏங்கி அங்கலாய்க்கையில்
இயேசுவே நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்

3   
பாதை எங்கும் அந்தகாரம்
சூழ்ந்து நிற்கும் வேளையில்
கொடிதாம் என் பாவ பாரம்
வேதனை கொடுக்கையில்
இயேசுவே நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்

4   
தந்தை தாயும் மக்கள் நண்பர்
யாருமின்றி ஏங்கினால்
துன்புறுத்தும் தீய வம்பர்
கைகள் என் மேல் ஓங்கினால்
இயேசுவே நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்

5   
பெலன் என்னிலே ஒடுங்கி
சாகும் நேரம் கிட்டுகில்
சாத்தான் என்னண்டை நெருங்கி
மோசம் போகப் பார்க்கையில்
இயேசுவே நீர் என்றைக்கும்
தஞ்சம் தந்து ரட்சியும்

Don`t copy text!