yesu

வல்ல இயேசு கிறிஸ்து நாதா / Valla Yesu Kristhu Naadhaa / Valla Yesu Kristhu Naathaa / Valla Yesu Kristhu Nadha / Valla Yesu Kristhu Natha
     
1      
அருள் ஜோதி தோன்றிடாமல்
இருள் மூடிக் கிடந்தோம்
திக்கில்லாமல் பாவப் பற்றில்
சிக்கிக்கொண்டே இருந்தோம்

வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்

2      
பக்தி ஒன்றுமில்லை பாரும்
சக்தியற்றுப்போயினோம்
ஜீவ பாதை சென்றிடாமல்
பாவப் பாதை நடந்தோம்

வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்

3   
இயேசு நாதரே இப்போது
நேசமாக நிற்கிறீர்
என்னை நம்பு பாவம் நீக்கி
உன்னைக் காப்பேன் என்கிறீர்

வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்

4      
நம்பி வந்து பாவ நாசா
உந்தன் பாதம் அண்டினோம்
தூய ரத்தம் பாயக் கண்டு
தீய செய்கை வெறுத்தோம்

வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்

5       
பாவச் சேற்றிலே விழாமல்
தேவரீரே காத்திடும்
வல்ல ஆவியாலே என்றும்
வெல்லச் செய்து ரட்சியும்

வல்ல இயேசு கிறிஸ்து நாதா
நல்ல நேச மீட்பர் நீர்
பற்று பாசம் கட்டு முற்றும்
அற்றுப்போகப் பண்ணுவீர்

Don`t copy text!