அர்ச்சனை மலராக | Archanai Malaraga / Archchanai Malaraga / Archanai Malaraaga / Archchanai Malaraaga
அர்ச்சனை மலராக | Archanai Malaraga / Archchanai Malaraga / Archanai Malaraaga / Archchanai Malaraaga
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
1
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சை பிள்ளையாயினும்
ரட்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராக புனிதராக வாழ படைகின்றீர்
பிறர் முன்பாக எங்கள் வாழ்வை தொடக்க அழைக்கின்றீர்
அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
2
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்க செய்கின்றீர்
உமது சாட்சியை நாங்கள் விளங்க செய்கின்றீர்
அழித்து ஒழித்து கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதே என்று எம்மை காத்து வருகின்றீர்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகிறோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம்
அர்ச்சனை மலராக | Archanai Malaraga / Archchanai Malaraga / Archanai Malaraaga / Archchanai Malaraaga | Yazhini | D. Mervin Suresh