குடிக்க யாவரும் / Kudikka Yaavarum / Kudikka Yavarum
குடிக்க யாவரும் / Kudikka Yaavarum / Kudikka Yavarum
1
குடிக்க யாவரும்
அழைப்பு பெற்றதான
தெய்வீகத் தயவின் ஊற்றின்னம் ஓட்டமான
இப்போதென் ஆவியே
நீ இயேசுவண்டை போ
வேறு யாராகிலும்
ரட்சிக்கக் கூடுமோ
2
சீர் கெட்ட உன்னை நீ
ரட்சிப்பது வீணாமே
நீ பற்ற வேண்டிய
சகாயர் கிறிஸ்து தாமே
பிதாவை இவரே
ஒப்புரவாக்கினார்
இவர்நிமித்தமே
பிதா இரங்கினார்
3
உன் பாவக் குற்றங்கள்
உன்னால் நீங்காத கேடு
மெய் விசுவாசத்தால்
நீ இயேசு வண்டை சேரு
உன் சுய புத்தியை
நீ பின்பற்றாதே போ
வழிகாட்டுபவர்
தெய்வாவி அல்லவோ
4
அன்புள்ள கர்த்தரே
அநேகப் பாவத்தாலே
திகைத்திருக்கிற
நான் வேட்டைக் காரராலே
துரத்தப்பட்டதாம்
மான் போல் தவிக்கிறேன்
இரக்கத்தின் ஊற்றே
என் தாகந்தருமேன்
5
மனத் தரித்திர்ர்
விண்ணப்பத்தைத் தள்ளீரே
அவர்கள் பாவத்தை
மன்னிக்கிறிறோ மென்றீரே
அடியேன் உமது
நல்லாவி காண்பிக்கும்
வழிக்குள்ளாகிறேன்
ஆ என்னை ரட்சியும்
6
என் தவனத்துக்கு
அச்சீவனின் தண்ணீரை
அளியும் கர்த்தரே
அத்தால் நான் நல்ல சீரை
அடைந்து புதிதாய்ச்
சிஷ்டிக்கப்படுவேன்
ஆ இந்தப் பாக்கியம்
என்மேல் வரட்டுமேன்