வாழ்நாளில் யாது நேரிட்டும் / Vaalnaalil Yaadhu Nerittum / Valnalil Yaadhu Nerittum / Vaalnaalil Yaathu Nerittum / Valnalil Yaathu Nerittum
வாழ்நாளில் யாது நேரிட்டும் / Vaalnaalil Yaadhu Nerittum / Valnalil Yaadhu Nerittum / Vaalnaalil Yaathu Nerittum / Valnalil Yaathu Nerittum
1
வாழ்நாளில் யாது நேரிட்டும்
எவ்வின்ப துன்பத்தில்
நான் போற்றுவேன் என் ஸ்வாமியை
சிந்தித்து ஆன்மாவில்
2
சேர்ந்தே ஒன்றாய் நாம் போற்றுவோம்
அவர் மா நாமமே
என் தீங்கில் கேட்டார் வேண்டலே
தந்தார் சகாயமே
3
சன்மார்க்கர் ஸ்தலம் சூந்துமே
விண் சேனை காத்திடும்
கர்த்தாவைச் சாரும் யாவர்க்கும்
சகாயம் கிட்டிடும்
4
அவர் மா அன்பை ருசிப்பின்
பக்தர் நீர் காண்பீராம்
பக்தரே பக்தர் மட்டுமே
மெய்ப் பேறு பெற்றோராம்
5
கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்
அச்சம் வேறில்லையே
களித்தவரைச் சேவிப்பின்
ஈவார் உம் தேவையே
6
நாம் போற்றும் ஸ்வாமியாம் பிதா
குமாரன் ஆவிக்கே
ஆதியில் போலும் எப்போதும்
மகிமை யாவுமே