என் இயேசு பெரியவரே | En Yesu Periyavare / En Yesu Periyavarae
என் இயேசு பெரியவரே | En Yesu Periyavare / En Yesu Periyavarae
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
1
கடல் அலைகள் போலவே
எந்த துன்பங்கள் வந்தாலும்
நம்புவேன் என் இயேசுவை
எந்தன் வாழ்நாளெல்லாம் நம்புவேன்
நம்புவேன் என் இயேசுவை
எந்தன் வாழ்நாளெல்லாம் நம்புவேன்
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
2
வியாதி வருத்தம் வறுமையோ
என்னை நெருக்கி ஆழ்த்தினாலும்
அஞ்சிடேன் நான் என்றென்றும்
அன்பார் இயேசு என்னோடு உண்டு
அஞ்சிடேன் நான் என்றென்றும்
அன்பார் இயேசு என்னோடு உண்டு
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
3
தாய் தகப்பனும் மறந்தாலும்
உற்றார் உறவினர் வெறுத்தாலும்
சோர்ந்திடன் நான் என்றென்றுமே
அரவணைக்கும் என் இயேசு உண்டு
சோர்ந்திடன் நான் என்றென்றுமே
அரவணைக்கும் என் இயேசு உண்டு
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
என் இயேசு பெரியவரே
என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்
என் இயேசு பெரியவரே | En Yesu Periyavare / En Yesu Periyavarae | Apostolic Christian Assembly (ACA) Divine Ministry), Vyasarpadi, Chennai, Tamil Nadu, India
