visuvaasam

புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும் / Buthikkettaada Anbin Vaaree Paarum

1
புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
உம் பாதம் அண்டினோமே தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இரு பேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்

2
ஆ ஜீவ ஊற்றே இவரில் உம் நேசம்
நல் நம்பிக்கையும் நோவு சாவிலும்
உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்

3
பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர்

புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும் / Buthikkettaada Anbin Vaaree Paarum

Don`t copy text!