virundhai

விருந்தைச் சேருமேன் / Virundhai Saerumaen / Virunthai Saerumaen

1   
விருந்தைச் சேருமேன்
அழைக்கிறார்
ஆகாரம் பாருமேன்
போஷிப்பிப்பார்
தாகத்தைத் தீர்க்கவும்
இயேசுவின் மார்பிலும்
சாய்ந்திளைப்பாறவும்
வா பாவி வா

2   
ஊற்றண்டை சேரவும்
ஜீவனுண்டாம்
பாடும் விசாரமும்
நீங்கும் எல்லாம்
நம்பி வந்தோருக்கு
திருப்தி உண்டாயிற்று
ஜீவாற்றின் அண்டைக்கு
வா பாவி வா

3   
மீட்பரின் பாதமும்
சேராவிடில்
தோல்வியே நேரிடும்
போராட்டத்தில்
இயேசுவே வல்லவர்
இயேசுவே நல்லவர்
இயேசுவே ஆண்டவர்
வா பாவி வா

4   
மோட்சத்தின் பாதையில்
முன் செல்லுவாய்
சிற்றின்ப வாழ்வினில்
ஏன் உழல்வாய்
வாடாத கிரீடமும்
ஆனந்தக் களிப்பும்
பேர் வாழ்வும் பெறவும்
வா பாவி வா

5   
சேருவேன் இயேசுவே
ஏற்றுக்கொள்வீர்
பாவமும் அறவே
சுத்தம் செய்வீர்
அப்பாலே மோட்சத்தில்
ஆனந்தக் கடலில்
மூழ்கிப் பேரின்பத்தில்
கெம்பீரிப்பேன்

விருந்தைச் சேருமேன் / Virundhai Saerumaen / Virunthai Saerumaen

Don`t copy text!