வேத புத்தகமே வேத புத்தகமே / Vedha Puththagamae Vedha Puththagamae / Veda Puthagame Veda Puthagame / Vetha Puththagame Vetha Puththagame
வேத புத்தகமே வேத புத்தகமே / Vedha Puththagamae Vedha Puththagamae / Veda Puthagame Veda Puthagame / Vetha Puththagame Vetha Puththagame
வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே
1
பேதைகளின் ஞானமே பெரிய திரவியமே
பாதைக்கு நல்தீபமே பாக்யர் விரும்புந் தேனே
வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே
2
என்னை எனக்குக் காட்டி என் நிலைமையை மாற்றிப்
பொன்னுலகத்தைக் காட்டிப் போகும் வழி சொல்வாயே
வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே
3
துன்பகாலம் ஆறுதல் உன்னால்வரும் நிசமே
இன்பமாகுஞ் சாவென்றாய் என்றும் நம்பின பேர்க்கே
வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே
4
பன்னிரு மாதங்களும் பறித்துண்ணலாம் உன்கனி
உன்னைத் தியானிப்பவர் உயர்கதி சேர்ந்திடுவார்
வேத புத்தகமே வேத புத்தகமே
வேத புத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே