போற்றிப் பாடுவேன் உம்மை | Potri Paaduven Ummai
போற்றிப் பாடுவேன் உம்மை | Potri Paaduven Ummai
போற்றிப் பாடுவேன் உம்மை
மகிமை நிறைந்தவர் நீரே
உயர்த்தி பாடுவேன் உம்மை
எங்கள் இராஜாதி இராஜனே
எங்கள் தேவாதி தேவனே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
1
உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்
உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்
உம்மை நாம் போற்றுவோம்
உயர்த்தி பாடுவோம்
மகிமை நிறைந்தவரே
எங்கள் மாறாத இயேசுவே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
2
தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்
தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்
உம்மை நான் நேசிப்போம்
எந்நாளும் ஆராதிப்பபோம்
வாழ்நாளெல்லாம் துதிப்போம்
எங்கள் யெகோவா தேவனே
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
3
உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா
உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா
என்றென்றும் பாடுவோம்
உம் நாமம் உயர்த்துவோம்
உம் சேவை செய்திடுவோம்
என்றும் உம்மண்டை சேர்ந்திடுவோம்
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
ஆராதிப்போம் உம் நாமத்தை
உயர்த்துவோம் உம் மேன்மையை
போற்றிப் பாடுவேன் உம்மை | Potri Paaduven Ummai | Jonathan Udhay, Charles, M. Samuel | Ganeeshgan GV | Jonathan Udhay / Broken Vessels Ministries