varuvaar

நினையாத நேரம் வருவார் | Ninaiyadha Neram Varuvar / Ninaiyaadha Neram Varuvaar

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு

கள்வனைப் போல
வருவேன் என்றார்
கள்வனைப் போல
வருவேன் என்றார்

கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு

1
என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே
என் மணவாளனே என் ஆத்ம நேசரே
எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே

உமக்காகவே வாழ்கிறேன்
உம்மோடு நான் சேரவே
உமை நோக்கி காத்திருக்கிறேன்
உமக்காக ஏங்குகிறேன்

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு

2
வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட
வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில்
எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட

எதிர் கொண்டு நான் செல்லுவேன்
இயேசுவை நான் சந்திப்பேன்
அவரை நான் கண்டு மகிழ்வேன்
அவரோடு நான் என்றும் வாழ்வேன்

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு
நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு

கள்வனைப் போல
வருவேன் என்றார்
கள்வனைப் போல
வருவேன் என்றார்

கண்ணோக்கி பார்த்து பார்த்து
கண் பூத்துப் போனதே

நினையாத நேரம் வருவார்
நீதியின் சூரியன் இயேசு

நினையாத நேரம் வருவார் | Ninaiyadha Neram Varuvar / Ninaiyaadha Neram Varuvaar | Beena | Patrick Rosario | Beena

Don`t copy text!