மா வாதைப்பட்ட இயேசுவே / Maa Vaadhaippatta Yesuve
மா வாதைப்பட்ட இயேசுவே / Maa Vaadhaippatta Yesuve
1
மா வாதைப்பட்ட இயேசுவே
அன்பின் சொரூபம் நீர்
நிறைந்த உந்தன் அன்பிலே
நான் மூழ்க அருள்வீர்
2
தெய்வன்பின் ஆழம் அறிய
விரும்பும் அடியேன்
நீர் பட்ட கஸ்தி ஒழிய
வேறொன்றும் அறியேன்
3
என் மீட்பர் ஜீவன் விட்டதால்
பூமி அசைந்ததே
கன்மலை அதைக் கண்டதால்
பிளந்து விட்டதே
4
அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை
பிளந்து தேவரீர்
உமது சாவின் பலத்தை
உணர்த்தக்கடவீர்
5
துராசை நீங்கத்தக்கதாய்
தெய்வன்பை ஊற்றிடும்
கற்போன்ற நெஞ்சை மெழுகாய்
உருகச் செய்திடும்