ulagor

உலகோர் உன்னைப் பகைத்தாலும் / Oolagor Unnai Pagaithalum / Ulagor Unnai Pagaithalum

1
உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூருவாயோ
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயோ
உந்தன் சிலுவை சுமப்பாயோ

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

எனக்காக நீ என்ன செய்தாய்

2
உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூருவாயோ
ஊழியம் செய்ய வருவாயா
ஊழியம் செய்ய வருவாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

எனக்காக நீ என்ன செய்தாய்

3
மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ
மேன்மையை நாடி ஒடுகின்றாயோ

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

எனக்காக நீ என்ன செய்தாய்

4
இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா
ஜீவ அப்பம் கொடுப்பாயா

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

எனக்காக நீ என்ன செய்தாய்

5
ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார்தான் போவார் எனக்காக
யார்தான் போவார் எனக்காக

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்
உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்

எனக்காக நீ என்ன செய்தாய்

உலகோர் உன்னைப் பகைத்தாலும் / Oolagor Unnai Pagaithalum / Ulagor Unnai Pagaithalum

Don`t copy text!