thuthithiduvenae

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே / Nandri Nandri Nandri Endru Thuthithiduvene / Nandri Nandri Nandri Endru Thuthithiduvenae

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே
நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

எத்தனை எத்தனை எத்தனையோ நன்மைகள்
எண்ணிலடங்கா பெரிய பெரிய நன்மைகள்
எத்தனை எத்தனை எத்தனையோ நன்மைகள்
எண்ணிலடங்கா பெரிய பெரிய நன்மைகள்

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே
நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

1
சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கி எடுத்தீரே
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓட கிருபை செய்தீரே
சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கி எடுத்தீரே
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓட கிருபை செய்தீரே

முற்றும் முடிய ஜெயம் கொள்ள அன்பு பொழிந்தீரே நான்
முற்றும் முடிய ஜெயம் கொள்ள அன்பு பொழிந்தீரே
என்னால் எல்லாம் செய்யும் படி பெலன் தந்தீரே
என்னால் எல்லாம் செய்யும் படி பெலன் தந்தீரே

நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி
நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

2
இது வரையில் கைவிடாமல் கரம் பிடித்தீரே
இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே
இது வரையில் கைவிடாமல் கரம் பிடித்தீரே
இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே

தீங்கு என்னை தொடராமல் விலக்கி காத்தீரே
தீங்கு என்னை தொடராமல் விலக்கி காத்தீரே
என் எல்லை எங்கும் வேலியடைத்து பாதுகாத்தீரே
என் எல்லை எங்கும் வேலியடைத்து பாதுகாத்தீரே

நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி
நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

3
எனது தேவை இன்னதென்று அறிந்து வைத்தீரே
ஏற்ற வேலை எல்லாம் எனக்கு கிடைக்கச் செய்தீரே
எனது தேவை இன்னதென்று அறிந்து வைத்தீரே
ஏற்ற வேலை எல்லாம் எனக்கு கிடைக்கச் செய்தீரே

குறைவுப்பட்டு போகாமல் நிரப்புகின்றீரே நான்
குறைவுப்பட்டு போகாமல் நிரப்புகின்றீரே
கோடாகோடியாக என்னை பெருகச்செய்தீரே
கோடாகோடியாக என்னை பெருகச்செய்தீரே

நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி
நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

4
உலகம் தோன்றும் முன்பே நீர் ஆசீர்வதித்தீரே
உம் உள்ளங்கையில் என்னை நீர் வரைந்துகொண்டீரே
உலகம் தோன்றும் முன்பே நீர் ஆசீர்வதித்தீரே
உம் உள்ளங்கையில் என்னை நீர் வரைந்துகொண்டீரே

உம் வல்லமையால் என் வாழ்வை உயிர்ப்பித்தீரே
உம் வல்லமையால் என் வாழ்வை உயிர்ப்பித்தீரே
உன்னதத்தில் உம்முடனே உட்காரச்செய்தீரே
உன்னதத்தில் உம்முடனே உட்காரச்செய்தீரே

நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி
நன்றி என்றும் நன்றி
நன்மைகள் செய்தீர் உமக்கு நன்றி

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே
நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

எத்தனை எத்தனை எத்தனையோ நன்மைகள்
எண்ணிலடங்கா பெரிய பெரிய நன்மைகள்
எத்தனை எத்தனை எத்தனையோ நன்மைகள்
எண்ணிலடங்கா பெரிய பெரிய நன்மைகள்

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே
நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே
நன்மை செய்த இயேசுவையே பாடிடுவேனே

நன்றி நன்றி நன்றி என்று துதித்திடுவேனே / Nandri Nandri Nandri Endru Thuthithiduvene / Nandri Nandri Nandri Endru Thuthithiduvenae | R. Deva Asir

Don`t copy text!