thukka

துக்க பாரத்தால் இளைத்து / Thukka Baaraththaal Ilaiththu / Thukka Baraththal Ilaiththu / Thukka Baarathaal Ilaithu / Thukka Barathal Ilaithu / Dhukka Baaraththaal Ilaiththu / Dhukka Baraththal Ilaiththu / Dhukka Baarathaal Ilaithu / Dhukka Barathal Ilaithu

1           
துக்க பாரத்தால் இளைத்து
நொந்து போனாயோ
இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்
வாராயோ

2   
அன்பின் ரூபகாரமாக
என்ன காண்பித்தார்
அவர் பாதம் கை விலாவில்
காயம் பார்

3   
அவர் சிரசதின் கிரீடம்
செய்ததெதனால்
ரத்தினம் பொன்னாலுமல்ல
முள்ளினால்

4   
கண்டுபிடித்தண்டினாலும்
துன்பம் வருமோ
கஷ்டம் துக்கம் கண்ணீர் யாவும்
இம்மையே

5   
அவரைப் பின்பற்றினோர்க்கு
துன்பம் மாறுமோ
சாவின் கூரும் மாறிப்போகும்
போதாதோ

6   
பாவியேனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன் என்பாரோ
விண் மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே

7   
போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா ஈவார்
தூதர் தீர்க்கர் தூயர் யாரும்
ஆம் என்பார்

துக்க பாரத்தால் இளைத்து / Thukka Baaraththaal Ilaiththu / Thukka Baraththal Ilaiththu / Thukka Baarathaal Ilaithu / Thukka Barathal Ilaithu / Dhukka Baaraththaal Ilaiththu / Dhukka Baraththal Ilaiththu / Dhukka Baarathaal Ilaithu / Dhukka Barathal Ilaithu | S. James Raja

Don`t copy text!