தூய வீரர் திருநாளை / Thooya Veerar Thirunaalai
தூய வீரர் திருநாளை / Thooya Veerar Thirunaalai
1
தூய வீரர் திருநாளை
பக்தி பரவசமாய்
ஆண்டுதோறும் வந்திப்போமே
எதிர்நோக்கி ஆவலாய்
2
தெய்வ வாழ்க்கைக்கேற்றாற் போலும்
வல்ல வீர செயல்கள்
செய்தார் என்றும் வாழ்த்துவோமே
பாடுவோம் தீங்கீதங்கள்
3
விசுவாசம் மா நம்பிக்கை
ஓங்கி உம்மை நேசித்தார்
மாட்சியோடும் வெற்றியோடும்
தூயர் வீரர் ஆயினார்
4
பாரின் இன்பம் துறந்திட்டே
வீரர் செய்கை புரிந்தார்
இப்போ வானில் தூயர் கூட்டம்
தாமும் ஒன்றாய்ச் சேர்ந்திட்டார்
5
கிறிஸ்துவோடு பாத்தியராகி
விண்ணின் மாட்சி அடைந்தார்
நாம் முன்னேறப் பாதம் வீழ்ந்து
பணிவாக ஜெபிப்பார்
6
பாரின் கஷ்ட வாழ்க்கை ஈற்றில்
மாய்க்கும் துன்பம் நீங்கிப் போம்
தந்தை வீட்டில் நாமும் சேர்ந்து
நித்திய மாட்சி கெலிப்போம்