theivanbuthaan

தெய்வன்புதான் மா இனிமை / Theivanbuthaan Maa Inimai / Theivanbuthan Maa Inimai

1         
தெய்வன்புதான் மா இனிமை
அதற்கென்றே என் உள்ளத்தைக்
கொடுத்திருக்கிறேன்
என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை
எப்போது அறிவேன்

2        
பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும்
ஆழமுமானதே
பூலோகத்தார் எல்லாருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும்
எட்டாததாயிற்றே

3        
தேவன்பின் ஆழம் கர்த்தாவே
அளந்து பார்த்தவர் நீரே
அன்பின் ப்ரவாகத்தை
என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும்
தீராத வாஞ்சனை

4        
உமது முகம் பார்ப்பதே
உம்மண்டை நித்தம் சேர்வதே
எனக்கு விருப்பம்
உமது சத்தம் கேட்பது
எனக்கு இன்பம் களிப்பு
என் மோட்ச பாக்யம்

Don`t copy text!