ஆத்துமாவே தீங்குக்கு / Aathumaave Theengukku / Aathumave Theengukku
ஆத்துமாவே தீங்குக்கு / Aathumaave Theengukku / Aathumave Theengukku
1
ஆத்துமாவே தீங்குக்குத்
தப்பத்தக்கதாக
நீ விழித்துத் தொழுது
கெஞ்சிக் கொள்வாயாக
ஏனென்றால்
சாத்தானால்
உனக்கெந்தத் திக்கும்
சோதனைகள் நிற்கும்
2
நீ விழித்தெழுந்திரு
மோசத்தை விட்டோடு
கண் தெளிய அதற்கு
நீ கலிக்கம் போடு
இவ்விதம்
ஆத்துமம்
கர்த்தரால் தாயையும்
ஒளியும் அடையும்
3
அப்புறம் பிசாசினி
சோதிக்க ஓயாதே
என்றறிந்து நீ விழி
அசதியாகாதே
ஏனென்றால்
தூங்கினால்
சோதனை பலக்கும்
தண்டனை பிறக்கும்
4
லோகம் உன்னை மீளவும்
வெல்லத்தக்கதாக
இன்பம் துன்பம் காண்பிக்கும்
நீ விழிப்பாயாக
ஜாதியார்
இனத்தார்
வீட்டாராலே தானும்
எத்தோர் வேளை காணும்
5
சுய நெஞ்சும் துரோகியே
தம்பிரானை விட்டு
சோரம்போகச் சாருமே
பைத்தியம் பிடித்து
யோசித்து
உப்புது
அதற்கெதிராக
நீ விழிப்பாயாக
6
இப்படி விழிக்கையில்
நீ ஜெபமும் பண்ணு
உன்னைச் சோதனைகளில்
ஆதரித்தன்றன்று
பாரத்தைக்
கண்ணியை
நீக்கிப் போடக் கர்த்தர்
ஒருவர் சமர்த்தர்
7
தெய்வ மைந்தன் நாமத்தில்
கர்த்தரை மெய்யாகத்
தொழுது கொண்டோமாகில்
பூரண அன்பாகச்
சகல
நல்வர
ஈவையும் அளிப்பார்
நித்தமும் ரட்சிப்பார்
8
ஆகையால் நெருக்கமும்
சாவும் நியாயத்தீர்ப்பும்
வரும்போ தொத்தாசையும்
ஆறுதலும் மீட்பும்
காணவே
நித்தமே
வேண்டிக்கொள்வாராக
நாம் விழிப்போமாக
