உன் தருணம் இதுவென்று | Un Tharunam Idhuvendru

உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
ஒரு தருணம் இது போல மறுமுறை வந்திடுமோ அறியாய்

1
பணம் போனால் வந்திடலாம் காலம் வந்திடுமா
பணம் போனால் வந்திடலாம் காலம் வந்திடுமா
பொருள் போனால் வந்திடலாம் வாலிபம் வந்திடுமா
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
2
மரணத்தினை நோக்கி நிதம் பயணம் தொடர்கின்றோம்
வெறுத்தாலும் மறுத்தாலும் அந்த பயணம் விடுவதில்லை
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
3
காலங்களும் தருணங்களும் உனக்காய் நிற்பதில்லை

செலவழித்த ஒரு நிமிடம் மறுபடி வருவதில்லை அதனால்
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
4
உயிர்த்தெழுந்த கிறிஸ்துவையே நோக்கியே திரும்பிடுவாய்

விலையில்லா இரட்சிப்பையே இன்றே அடைந்திடிடுவாய் வாராய்
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
ஒரு தருணம் இது போல மறுமுறை வந்திடுமோ அறியாய்
உன் தருணம் இதுவென்று உணர்ந்திடுவாய் மகனே
உன் தருணம் இதுவென்று | Un Tharunam Idhuvendru | Vincent Selvakumar