thangum

ஜீவனுள்ள தேவன் தங்கும் / Jeevanulla Devan Thangum

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் தாயகம்
விண்ணகம் தகப்பன் வீடு
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

1
கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர்
கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர்

பரிசுத்தரே என்று பாடி மகிழ்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடிப்பாடி மகிழ்கின்றனர்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக தேவன் பரிசுத்தர் நம்
பரலோக தேவன் பரிசுத்தர்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

2
பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்

திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்

அல்லேலூயா ஓசன்னா
அல்லேலூயா ஓசன்னா

கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில்
கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

3
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே

எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி

நீதிபதி கர்த்தரே
நீதிபதி கர்த்தரே

எல்லாரையும் நியாயந்தீர்க்கும்  நீதிபதி அவர்
எல்லாரையும் நியாயந்தீர்க்கும்  நீதிபதி

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

4
புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே

நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு

Don`t copy text!