talaiver

நண்பனே என் நண்பனே | Nanbane En Nabane

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய்

இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய்

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய் உந்தன்
சொந்தங்களை மறந்தாய்

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய் உந்தன்
சொந்தங்களை மறந்தாய்

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

1
என்னிடம் எல்லாம் உண்டென்று எண்ணி
அகந்தை கொள்ளாதே நீ இன்று
அகந்தை கொள்ளாதே

கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல்
பெருமை கொள்ளாதே இறைவன்
கொடுத்ததை மறவாதே

கொடுத்தது யாரென சற்றும் எண்ணாமல்
பெருமை கொள்ளாதே இறைவன்
கொடுத்ததை மறவாதே

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

2
உள்ளது யாவுமே ஒரு நொடியினில்
அழிந்து போலாமே நொடியில்
அழிந்து போலாமே

கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால்
தடுக்கலாகுமோ உன்னால்
தடுக்க முடியுமோ

கொடுத்த இறைவன் எடுக்க நினைத்தால்
தடுக்கலாகுமோ உன்னால்
தடுக்க முடியுமோ

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

3
இயேசுவால் கிடைத்த நன்மைகளை நீ
எண்ணி துதிப்பாயே இன்றே
எண்ணி துதிப்பாயே

உன்னிலும் சிறியோன் உண்டென்று எண்ணி
உதவி செய்வாயே உள்ளதை
பகிர்ந்து வாழ்வாயே

உன்னிலும் சிறியோன் உண்டென்று எண்ணி
உதவி செய்வாயே உள்ளதை
பகிர்ந்து வாழ்வாயே

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய்

இன்பத்தில் திளைத்து சுகித்து வாழ்கையில்
தன்னிலை ஏன் மறந்தாய் நீ ஏன்
சுயநலமாய் வாழ்ந்தாய்

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய் உந்தன்
சொந்தங்களை மறந்தாய்

துன்பத்தில் வாடி துடிதுடிக்கும்
உறவினை மறந்தாய் உந்தன்
சொந்தங்களை மறந்தாய்

நண்பனே என் நண்பனே
கடந்து வந்த வழியை நீயும்
திரும்பி பாராயோ இன்று
திரும்பி பாராயோ

நண்பனே என் நண்பனே | Nanbane En Nabane | Jollee Abraham | Manuel Talaiver

Don`t copy text!