sudracholapuram

நான் போகும் பயணம் | Naan Pogum Payanam

1
நான் போகும் பயணம்
ரொம்ப ரொம்ப தூரம்
நான் நடந்த பாதையெல்லாம்
என் தெய்வம் கூட வந்தார்

நான் போகும் பயணம்
ரொம்ப ரொம்ப தூரம்
நான் நடந்த பாதையெல்லாம்
என் தெய்வம் கூட வந்தார்

எத்தனையோ மலைகள்
கடும்பள்ளத்தாக்குகள்
துர்ச்சனப்பிரவாகம் மரண இருளும்

என்னை நெருக்கி மூடிக்கொண்ட நேரம்
ஒரு தகப்பனைப்போல்
தூக்கி அணைத்துக்கொண்டீர்

என்னை நெருக்கி மூடிக்கொண்ட நேரம்
ஒரு தகப்பனைப்போல்
தூக்கி அணைத்துக்கொண்டீர்

மாறாத கிருபை விலகாத கிருபை
மாறாத கிருபை விலகாத கிருபை
என் மேலே வைத்தீரையா
என் மேலே வைத்தீரையா

அன்பே என் இயேசுவே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே

2
வனாந்திர பாதையில
நான் நடந்து போகையில
தாகத்தால் நாவறண்டு
தண்ணீரும் இல்ல இல்ல

வனாந்திர பாதையில
நான் நடந்து போகையில
தாகத்தால் நாவறண்டு
தண்ணீரும் இல்ல இல்ல

அங்கும் இங்கும்
அலைந்து நான் திரிந்தேன்
அந்த அழுகை என்ற
பள்ளத்தாக்கில் நடந்தேன்

அங்கும் இங்கும்
அலைந்து நான் திரிந்தேன்
அந்த அழுகை என்ற
பள்ளத்தாக்கில் நடந்தேன்

மழை பெய்து குளங்கள்
நிரம்புவது போல
மழை பெய்து குளங்கள்
நிரம்புவது போல

என் ஆத்துமாவை நிரப்பினீர்
என் தாகம் தீர்த்தீரையா

அன்பே என் இயேசுவே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே

3
பொல்லாத உலகில
துணை செய்ய யாரும் இல்ல
என்னையும் காக்கிறவர்
தூங்கவில்ல உறங்கவில்ல

பொல்லாத உலகில
துணை செய்ய யாரும் இல்ல
என்னையும் காக்கிறவர்
தூங்கவில்ல உறங்கவில்ல

ஆறுகளை கடந்து நான் போனேன்
அந்த அக்கினியில்
உருவ நான் நடந்தேன்

ஆறுகளை கடந்து நான் போனேன்
அந்த அக்கினியில்
உருவ நான் நடந்தேன்

முழுகி போகல
எரிந்தும் நான் போகல
முழுகி போகல
எரிந்தும் நான் போகல

கூடவே வந்தீரையா
கூடவே வந்தீரையா

அன்பே என் இயேசுவே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே

நான் போகும் பயணம் | Naan Pogum Payanam | L. Lucas Sekar | Alwyn | L. Lucas Sekar / Bethel Sharon Church, Sudracholapuram, Thiruverkadu, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!