soola

துக்கம் திகில் இருள் சூழ / Dhukkam Thigil Irul Soola / Thukkam Thigil Irul Soola

1          
துக்கம் திகில் இருள் சூழ
மோட்ச யாத்திரை செய்கிறோம்
கீதம் பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்

2        
இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீபஸ்தம்ப ஜோதியும்
வீரமாக ஐக்கியமாக
முன்னே செல்வோம் ராவிலும்

3        
பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே
இருள் நீங்க அச்சம் நீங்கும்
பாதை முற்றும் பகலே

4        
எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே
குன்றா விசுவாசமும்
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே
ஒன்றே எம் நம்பிக்கையும்

5        
மோட்சம் செல்லும் கோடிப் பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்
ஆபத்து போராட்டம் தெய்வப்
பாதை செல்வதும் ஒன்றாம்

6        
மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே

7        
முன்னே செல்வீர் தோழரே நீர்
சிலுவை உம் பலமாம்
நிந்தை தாங்கி போர்புரிவீர்
ஆயுள் காலமும் எல்லாம்

8        
நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்
துக்கம் திகில் யாவும் நீங்கும்
பாடும் ராவும் ஓய்ந்துபோம்

Don`t copy text!