sontham

நீர் என் சொந்தம் / Neer En Sondham / Neer En Sontham

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்

1
வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்

வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் குழந்தையின் அழுகையை கேட்டவர்
என் தாகம் தீர்க்க வல்லவர்

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

2
நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன்

நெறிந்த நாணலை முறிக்காதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தெய்வம் யேசுபரன்

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தமே எனக்கு

சூறைச்செடியின் கீழிலும்
உம் சமுகம் என்னை தேற்றுமே

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்பவேளைகளில்

நீர் என் சொந்தம் / Neer En Sondham / Neer En Sontham | Premji Ebenezer | J. V. Peter

நீர் என் சொந்தம் / Neer En Sondham / Neer En Sontham | Robert Roy

Don`t copy text!