son

சின்ன சிட்டு குருவியே / Chinna Chittu Kuruviyae / Chinna Chittu Kuruviye

1
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே
உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே
உன்னை சந்தோஷமாய் படைச்சது யாரு

அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே
உன்னை அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்

உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

2
சின்னஞ் சிட்டுக் குருவியே
சின்னஞ் சிட்டுக் குருவியே உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி எனக்கு செய்திடுவாயா

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு

எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா அவர்
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா அவர்
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே
ஆமாம் சிட்டுக் குருவியே
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே

லா லா லா ல ல லா லா லா
லா லா லா ல ல லா லா லா
லா லா லா ல ல லா லா லா
லா லா லா ல ல லா லா லா

சின்ன சிட்டு குருவியே / Chinna Chittu Kuruviyae / Chinna Chittu Kuruviye | J. S. Jacinth Son, J. S. Shana Rialin | Sathia Raj / HARVESTmelodies

Don`t copy text!