siji

திக்கு தெரியாமல் | Thikku Theriyaamal

திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ
திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ

நீ மறந்தாலும் உன்னை மறக்காத தேவன்
நீ அகன்றாலும் மார்போடு அணைக்கின்ற நாதர்
என்றென்றும் அன்பை பொழிகின்ற நாதர்

திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ

1
தன்னந்தனியாக நின்றபோது உற்றத்துணை இயேசு வந்திடுவார்
நிராசையாய் எண்ணங்கள் கலையும்போதும் மனமுருகி தேவன் பதிலளிப்பார்
அழுது அழுது நீ உடைந்து போய் நிற்கையில் தேற்றும் தாய் போல் நாதர் அணைத்திடுவார்
அழுது அழுது நீ உடைந்து போய் நிற்கையில் தேற்றும் தாய் போல் நாதர் அணைத்திடுவார்
அவரின் செட்டையின் மறைவில் காத்திடுவார்

திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ

2
வியாதியால் உன் மனம் கலங்கும் போது சுகமளிக்கும் தேவன் விரைந்திடுவார்
அவர் பாதம் பணிந்து நீ மனம் திறந்தால் உன் பாவங்கள் எல்லாம் கழுவிடுவார்
இந்த நல்மேய்ப்பராம் உன் இயேசு நாதரை மறந்திடாதே நீ என் மகனே
இந்த நல்மேய்ப்பராம் உன் இயேசு நாதரை மறந்திடாதே நீ என் மகனே
என்றும் மறந்திடாதே நீ என் மகளே

திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ
திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ

நீ மறந்தாலும் உன்னை மறக்காத தேவன்
நீ அகன்றாலும் மார்போடு அணைக்கின்ற நாதர்
என்றென்றும் அன்பை பொழிகின்ற நாதர்

திக்கு தெரியாமல் ஓடுமோர் வாழ்க்கையில்
என்றும் மறக்காதே தெய்வத்தை நீ

திக்கு தெரியாமல் | Thikku Theriyaamal | Siji M. George | Nelson Peter | Siji M. George

Don`t copy text!