shine

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் / Ullathil Avarpaal Peranbullorelaam

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

1
பரமன் பேரிலே பற்றுக் கொண்டோரெல்லாம்
எளிதில் புரிவார் அவரின் பாரத்தை
உலகின் பேரிலே இயேசுவின் அக்கரை
தமதாக்கியவர் வாழுவார் மாளுவார்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

2
தேசங்கள் தீவுகள் பல பிராந்தியங்கள்
பாவத்தால் நிறைந்து சாபமாகிறது
திறப்பின் வாயிலே நிற்கத்தக்கதாக
தேவன் தேடும் நபர் நம்மிலே யார் யாரோ
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மையே அவர்க்காய் அளிப்பார்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

3
செல்வம் சீர் சிறப்பு நற்குடிப் பிறப்பு
செல்வாக்கு அந்தஸ்து படாடோபவஸ்து
யாவையும் பெரினும் சாகையில் என் செய்வீர்
உலகின் சம்பத்து குப்பை என்றே சொல்வீர்
உண்மை அடியவர் இயேசுவை அறிவார்
தம்மை அவர்க்காய் அளிப்பார்

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம்
எண்ணத்தில் தெளிவை பெறுவீர்
சொல்லதில் கூறுவீர் வாழ்வதில் சாதிப்பீர்
இயேசு தேடும் நபர் இவரே

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் / Ullathil Avarpaal Peranbullorelaam | N. Emil Jebasingh

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் / Ullathil Avarpaal Peranbullorelaam | Grace Browning | Richard Vijay | N. Emil Jebasingh

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் / Ullathil Avarpaal Peranbullorelaam | Singspirations | N. Emil Jebasingh

உள்ளத்தில் அவர்பால் பேரன்புள்ளோரெல்லாம் / Ullathil Avarpaal Peranbullorelaam | S. Bennet Shine India Ministries, Nagercoil, Kanyakumari, Tamil Nadu, India | N. Emil Jebasingh

Don`t copy text!