இயேசு எங்கள் மேய்ப்பர் / Yesu Engal Maeyppar / Yesu Engal Meipar / Yesu Engal Meippar
இயேசு எங்கள் மேய்ப்பர் / Yesu Engal Maeyppar / Yesu Engal Meipar / Yesu Engal Meippar
1
இயேசு எங்கள் மேய்ப்பர்
கண்ணீர் துடைப்பார்
மார்பில் சேர்த்தணைத்து
பயம் நீக்குவார்
துன்பம் நேரிட்டாலும்
இன்பம் ஆயினும்
எசுவின்பின் செல்வோம்
பாளர் யாவரும்
2
நல்ல மேய்ப்பர் சத்தம்
நன்றாய் அறிவோம்
காதுக்கின்பமாக
கேட்டுக் களிப்போம்
கண்டித்தாலும் நேசர்
ஆற்றித் தேற்றுவார்
நாங்கள் பின்னே செல்ல
வழி காட்டுவார்
3
ஆட்டுக்காக மேய்ப்பர்
ரத்தம் சிந்தினார்
அதில் மூழ்கினோரே
தூயர் ஆகுவார்
பாவ குணம் நீக்கி
முற்றும் ரட்சிப்பார்
திவ்விய தூய சாயல்
ஆக மாற்றுவார்
4
இயேசு நல்ல மேய்ப்பர்
ஆட்டைப் போஷிப்பார்
ஓநாய்கள் வந்தாலும்
தொடவே ஒட்டார்
சாவின் பள்ளத்தாக்கில்
அஞ்சவே மாட்டோம்
பாதாளத்தின் மேலும்
ஜெயங்கொள்ளுவோம்
இயேசு எங்கள் மேய்ப்பர் / Yesu Engal Maeyppar / Yesu Engal Meipar / Yesu Engal Meippar | Sudan Karish
இயேசு எங்கள் மேய்ப்பர் / Yesu Engal Maeyppar / Yesu Engal Meipar / Yesu Engal Meippar | CEF of India, Coimbatore, Tamilnadu, India
இயேசு எங்கள் மேய்ப்பர் / Yesu Engal Maeyppar / Yesu Engal Meipar / Yesu Engal Meippar