seeyonae

உன் வாசல் திற சீயோனே / Un Vaasal Thira Seeyone / Un Vasal Thira Seeyone / Un Vaasal Thira Seeyonae / Un Vasal Thira Seeyonae

1   
உன் வாசல் திற சீயோனே
மெய்ப் பொருளானவர்
தாமே ஆசாரி பலியாய்
உன்னிடம் வந்தனர்

2   
கடாக்கள் ரத்தம் சிந்தல் ஏன்
பிதாவின் மைந்தனார்
தம் பீடமீது பாவத்தின்
நிவாரணம் ஆனார்

3   
தன் பாலன் ஸ்வாமி என்றோர்ந்தே
தூய தாய் மரியாள்
ஓர் ஜோடு புறாக் குஞ்சுகள்தான்
காணிக்கையாய் வைத்தாள்

4   
தாம் எதிர்பார்த்த கர்த்தரை
அன்னாள் சிமியோனும்
கண்ணுற்ற சாட்சி கூறினார்
ஆனந்தமாகவும்

5   
சௌபாக்யவதி மாதாவோ
தன் நெஞ்சில் யாவையும்
வைத்தெண்ணியே வணங்கினாள்
மா மௌனமாகவும்

6   
பிதா குமாரன் ஆவிக்கும்
நீடுழி காலமே
எல்லாக் கனம் மகிமையும்
மேன்மேலும் ஓங்குமே

Don`t copy text!