satya

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார் ரஞ்சிதனார்
தாம் தாம் தன்னரர் வன்னரர்
தீம் தீம் தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

1
ஆதாம் சாதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார்

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

2
பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

3
அல்லேலூயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலகனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Beryl Natasha, Napier Naveen, Keba Jeremiah, Stephen Jebakumar

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Helen Satya

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Jesintha

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Srinisha

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Srinisha | Gladies Samuel / Immanuel Gospel Prayer House (IGPH) (Church), Kamala Nagar, Basaveshwar Nagar, Bangalore, Karnataka, India

ஆதித் திருவார்த்தை / Aadhi Thiruvaarthai | Purnima, Sharon Merlina | D. Mervin Suresh

Don`t copy text!