என்னை நேசிக்க | Ennai Nesikka
என்னை நேசிக்க | Ennai Nesikka
என்னை நேசிக்க ஒரு இருதயம்
கிடைக்குமா என்று ஏங்குதே என் உள்ளம்
என்னை விசாரிக்க ஒரு இருதயம்
கிடைக்குமா என்று தவிக்குதே என் உள்ளம்
அன்பு தோள்களில் நான் சாய்ந்திட
அந்த தோள்கள் இல்லையே
அன்பு தோள்களில் சாய்ந்து கதறிட
அந்த தோள்கள் எனக்கில்லையே
தவிக்கிறேன்
1
நேசிக்க ஒரு உள்ளம் இருந்ததே
அன்பு காட்டிட ஒரு இதயம் இருந்ததே
நேசிக்க ஒரு உள்ளம் இருந்ததே
அன்பு காட்டிட ஒரு இதயம் இருந்ததே
அதை புரியாமல் உள்ளம் உடைதேனே
ஆழம் தெரியாமல் நோகடிதேனே
இன்று அழுகிறேன் என்ன லாபம்
அந்த நேசம் இல்லையே
இன்று உணர்கிறேன் என்ன லாபம்
அந்த தருணம் போனதே
அன்பு தோள்களில் நான் சாய்ந்திட
அந்த தோள்கள் இல்லையே
அன்பு தோள்களில் சாய்ந்து கதறிட
அந்த தோள்கள் எனக்கில்லையே
தவிக்கிறேன்
2
சொன்ன வார்த்தையை அலட்சியப்படுத்தினேன்
எனக்கெல்லாம் தெரியும் என்று உதாசீனப்படுத்தினேன்
சொன்ன வார்த்தையை அலட்சியப்படுத்தினேன்
எனக்கெல்லாம் தெரியும் என்று உதாசீனப்படுத்தினேன்
தூக்கியெறிந்தேனே நல்ல வார்த்தையை
எடுத்தெறிந்தேனே ஆலோசனையை
இன்று அழுகிறேன் என்ன லாபம்
அந்த வார்த்தை இல்லையே
இன்று உணர்கிறேன் என்ன லாபம்
அந்த தருணம் போனதே
அன்பு தோள்களில் நான் சாய்ந்திட
அந்த தோள்கள் இல்லையே
அன்பு தோள்களில் சாய்ந்து கதறிட
அந்த தோள்கள் எனக்கில்லையே
தவிக்கிறேன்
3
அழுத நேரம் ஒரு வார்த்தை வந்ததே
உடைந்த உள்ளத்தில் ஆறுதல் தந்ததே
அழுத நேரம் ஒரு வார்த்தை வந்ததே
உடைந்த உள்ளத்தில் ஆறுதல் தந்ததே
ஒரு சந்தோசம் என் உள்ளத்தில்
ஒரு சமாதானம் என் இதயத்தில்
இந்த அழுகையின் பள்ளத்தாக்கில்
என் இயேசு என்னை கண்டார்
தூக்கி எடுத்தார் அரவணைத்தார்
தம் அன்பு தோள்களினால்
நீர் போதுமே என் இயேசுவே
உம் தோள்களில் என் ஆறுதல்
உம் மார்பினில் சாய்ந்து கதறுவேன்
என்னை தேற்றிட நீர் உள்ளீரே
நீர் போதுமே என் இயேசுவே
உம் தோள்களில் என் ஆறுதல்
உம் மார்பினில் சாய்ந்து கதறுவேன்
என்னை தேற்றிட நீர் உள்ளீரே
இயேசுவே
என்னை நேசிக்க | Ennai Nesikka | Stephen Sanders | Stephen Sanders | Stephen Sanders
