saalem

மா சாலேம் சொர்ண நாடு / Maa Saalem Sorna Naadu / Maa Saalem Sorna Nadu

1         
மா சாலேம் சொர்ண நாடு
பால் தேனாய் ஓடிடும்
உன்மேல் தவித்தே ஏங்கி
என் உள்ளம் வாடிடும்
ஆ என்ன என்ன மாட்சி
பூரிப்பும் ஆங்குண்டே
யார்தானும் கூற வல்லோர்
உன் திவ்விய ஜோதியே

2        
சீயோன் நகரில் எங்கும்
பூரிப்பின் கீதமாம்
நல் ரத்தச் சாட்சி சேனை
தூதரின் ஸ்தானமாம்
கர்த்தராம் கிறிஸ்து ஆங்கு
மா ஜோதி வீசுவார்
விண் மாட்சி மேய்ச்சல் காட்டி
பக்தரைப் போஷிப்பார்

3        
கவலை தீர்ந்து காண்போம்
தாவீதின் ஆசனம்
விருந்தர் ஆர்ப்பரிப்பார்
மா வெற்றி கீர்த்தனம்
தம் மீட்பரைப் பின்சென்று
போராடி வென்றனர்
என்றென்றும் மாட்சியோடு
வெண்ணங்கி பூண்டனர்

4        
ஆ பாக்கிய திவ்விய நாடே
என்றைக்கும் சேருவேன்
ஆ பாக்கிய திவ்விய நாடே
உன் அருள் பெறுவேன்
ஆ சாம்பல் மண்ணாம் மாந்தர்
கர்த்தாவைப் பெறுவார்
ஆ இன்றும் என்றும் மாந்தர்
கர்த்தாவின் அடியார்

Don`t copy text!