ratchagaraana

ரட்சகரான இயேசுவே / Ratchagaraana Yesuve / Ratchagarana Yesuve

1           
ரட்சகரான இயேசுவே
எங்களை மீட்க நீர்
சுகந்த பலியாகவே
ஜீவனைக் கொடுத்தீர்

2   
கெட்டோரைச் சேர்த்து பாவத்தை
கட்டோடே நீக்கிடும்
இப்போது பாவ மன்னிப்பை
எல்லார்க்கும் ஈந்திடும்

3   
பாவத்தை நாசமாக்கவே
கால் காயப்பட்டது
கெட்டோரை ஏற்றுக்கொள்ளவே
கை நீட்டப்பட்டது

4   
செந்நீர் நிறைந்த காயங்கள்
சுமந்த கர்த்தனே
என்னால் விளைந்த பாவங்கள்
எல்லாம் அகற்றுமே

5   
உமது வாக்கை ரூபிக்க
ரத்தத்தால் என்னையும்
கழுவி உம்மைச் சேவிக்க
கிருபை அளியும்

Don`t copy text!