ratchaga

இயேசு ரட்சகா / Yesu Ratchagaa / Yesu Ratchaga

1
திசை தெரியா யோசேப்பை தேடி
தேவ தூதன் விளம்பினாரே
மரியாளை சேர்த்து கொள்ள ஐயாதே
ஆவியானவர் அவள் மேலே

விவரிக்க முடியாத அற்புதம்
விசுவாசித்து வருவாயா
தீர்க்கன் உரைத்த நல் மீட்பரே
பிறந்தார் நம்மை விடுவிக்கவே

இம்மானுவேல் தேவன் நம்மோடு
பிறந்தார் உலகத்திலே
சிலுவையில் மீட்டிடவே
உம் அன்பின் ஆழம் பெரிதே
என் உள்ளம் அறிதல் அரிதே
இயேசு ரட்சகா நீர் என்றும் வாழ்கவே

2
கன்னியான மரியாளை கண்டு
தேவ தூதன் விளம்பினாரே
தேவனிடத்தில் கிருபை பெற்றாயே
அவர் வல்லமை உன் மேலே

விவரிக்க விந்தையான அற்புதம்
விசுவாசித்து வருவாயா
தீர்க்கன் உரைத்த தேவா குமரனே
பிறந்தார் நம்மை விடுவிக்கவே

இம்மானுவேல் தேவன் நம்மோடு
பிறந்தார் உலகத்திலே
சிலுவையில் மீட்டிடவே
உம் அன்பின் ஆழம் பெரிதே
என் உள்ளம் அறிதல் அரிதே
இயேசு ரட்சகா நீர் என்றும் வாழ்கவே

3
வயல்வெளியில் மேய்ப்பர்களை கண்டு
தேவ தூதன் விளம்பினாரே
சந்தோஷ நற்செய்தி இதுவே
உலக ரட்சகர் உதித்தாரே

விவரிக்க புதுமையான அற்புதம்
விசுவாசித்து வருவாயா
தீர்க்கன் உரைத்த தேவா பலனே
பிறந்தார் நம்மை விடுவிக்கவே

இம்மானுவேல் தேவன் நம்மோடு
பிறந்தார் உலகத்திலே
சிலுவையில் மீட்டிடவே
உம் அன்பின் ஆழம் பெரிதே
என் உள்ளம் அறிதல் அரிதே
இயேசு ரட்சகா நீர் என்றும் வாழ்கவே

இயேசு ரட்சகா நீர் என்றும் வாழ்கவே
இயேசு ரட்சகா நீர் என்றும் வாழ்கவே

இயேசு ரட்சகா / Yesu Ratchagaa / Yesu Ratchaga | David Shawn, Ruby David, Samuel Prince, Jestin, Chrispina

Don`t copy text!