rajave

மண்ணோரை மீட்க | Mannorai Meetka Vandha Rajave / Mannorai Meetka Vandha Raajaave / Mannorai Meetka Vandha Rajavae / Mannorai Meetka Vandha Raajaavae

மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று வேகம் வாருமே
மண்ணோரம் எம்மை விண்ணோடு சேர்க்க
விண் தூதரோடு வாருமே

1
பின்பற்றுவோர்க்கு பிதாவின் வீட்டில்
பேரின்பத்தோடு வாழ்வதற்கு
வாசஸ்தலங்கள் உண்டென்று சொல்லி
சென்ற எம் தேவா வாருமே

மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று வேகம் வாருமே

2
அறியாத நேரம் வருவேன் என்றீரே
அடியார்கள் என்றும் ஊக்கத்தோடே
விசுவாசம் அன்பு நம்பிக்கையோடே
விழித்திருக்க அன்பாய் அருள் தாருமே

மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று வேகம் வாருமே

3
நித்திரை செய்யும் தேவதாசரும்
இத்திரை வாழ்வு பெற்ற நாமும்
கீர்த்தனம் பாடி எதிர்கொண்டு செல்ல
கெம்பீரமாக வாருமே

மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று வேகம் வாருமே

மண்ணோரை மீட்க வந்த ராஜாவே
விண்ணின்று வேகம் வாருமே
மண்ணோரம் எம்மை விண்ணோடு சேர்க்க
விண் தூதரோடு வாருமே

மண்ணோரை மீட்க | Mannorai Meetka Vandha Rajave / Mannorai Meetka Vandha Raajaave / Mannorai Meetka Vandha Rajavae / Mannorai Meetka Vandha Raajaavae | Kiruba Victor, Victor Durai

Don`t copy text!