வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே / Vaana Senaigale Rajakkale Prabukkale / Vaana Senaigale Raajaakkale Prabukkale
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே / Vaana Senaigale Rajakkale Prabukkale / Vaana Senaigale Raajaakkale Prabukkale
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
1
நமக்கு சந்தோசம் சமாதானம்
தந்திட பாலனாய் இயேசு பிறந்தார்
குளிர் தென்றல் காற்றே மூடுபனியே
மழையே சாரலே விரைந்து வா
தாலாட்டு பாடி என் இயேசு பாலனை
மகிழ வைக்க நீயும் விரைந்து வா
தாலாட்டு பாடி என் இயேசு பாலனை
மகிழ வைக்க நீயும் விரைந்து வா
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
2
வானில் பறக்கும் சிட்டுகளே
அழகிய வண்ணத்து பூச்சிகளே
உங்களின் அழகு சிறகுகளை
வானில் அடித்து ஆர்ப்பரியுங்கள்
துதித்து பாடி என் இயேசு பாலனை
மகிழ வைக்க நீயும் பறந்து வா
துதித்து பாடி என் இயேசு பாலனை
மகிழ வைக்க நீயும் பறந்து வா
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
3.
வாசமுள்ள வண்ண மலர்களே
வாசம் வீசிட வாருங்களேன்
இரக்கமும் உருக்கமும் உடையவரை
தாழ்மையின் ரூபம் எடுத்தவரை
மகிழ்ந்து பாடி என் இயேசு பாலனை
துதித்துப் போற்றி பாடிட வா
மகிழ்ந்து பாடி என் இயேசு பாலனை
துதித்துப் போற்றி பாடிட வா
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே
மண்ணின் மைந்தர்களே இயேசு பாலன் பிறந்தாரே
வான சேனைகளே ராஜாக்களே பிரபுக்களே / Vaana Senaigale Rajakkale Prabukkale / Vaana Senaigale Raajaakkale Prabukkale | Jimreeves Samuel | Rajan G.