raayarae

கிறிஸ்து எம் ராயரே / Kristhu Em Raayarae / Kristhu Em Rayarae

1   
கிறிஸ்து எம் ராயரே
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்

2   
விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்

3   
உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்

4   
எழும்பும் கர்த்தாவே
வல்லராய் வாருமேன்
தாசர் தவித்தோமே
வந்தாற்றித் தேற்றுமேன்

5   
உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்

6   
தேசங்கள் யாவிலும்
மெய் பக்தி மங்கிற்றே
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே

கிறிஸ்து எம் ராயரே / Kristhu Em Raayarae / Kristhu Em Rayarae

Don`t copy text!